கார்ப்பரேட் உலகத்தின் இறுக்கமானச் சூழலுக்கு நடுவே, எதிர்பாராமல் அரங்கேறிய ஒரு தந்தை-மகள் உரையாடல், தற்போது இணையவாசிகளைச் சிரிப்பலையில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.
ஆன்லைன் கார்ப்பரேட் கூட்டத்தில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த மகளின் அறைக்குள் திடீரெனப் புகுந்த தந்தை ஒருவர், அவரது அவசரக் கொள்முதலையும் பணத்தைச் செலவழிக்கும் முறையையும் சுட்டிக்காட்டி நச்சென்று அறிவுரை கூறிய சம்பவம் தான் இந்த கலகலப்பிற்கு முக்கியக் காரணம்.
பொதுவாக வீடுகளில் ஆன்லைன் மீட்டிங் நடக்கும்போது குடும்பத்தினர் அமைதி காப்பது வழக்கம். ஆனால், இந்தத் தந்தையோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மகள் தேவையில்லாமல் செய்த ஆன்லைன் ஷாப்பிங்கைக் கண்டு பொங்கி எழுந்துவிட்டார்.
மகளின் ஆபீஸ் மீட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கூட யோசிக்காமல், “பணத்தை எப்படிப் பார்த்துப் பார்த்துச் செலவழிக்கணும்” என்று அவர் பாணியிலேயே அட்வைஸ் மழை பொழிய, அதை எதிர்பாராத மகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போனது.
இந்தத் தந்தை-மகள் இடையேயான யதார்த்தமான பாசப்போராட்டமும், தந்தையின் நகைச்சுவையான அந்த கண்டிப்பும் அடங்கிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மேலும் “எந்தக் காலத்துல எந்த வேலை செஞ்சாலும், அப்பாக்களோட அட்வைஸ் டைமிங்கை யாராலயும் கணிக்க முடியாது” என்றும், “பனிய சமூகத்துத் தந்தையர்களின் சேமிப்புப் புத்தி எப்போதும் தனித்துவமானதுதான்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் ஜாலியாகப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
See this Instagram video by @lifeatzorcha https://t.co/QK5wMZS27y
“>
