தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் ஒரு உதவியாளர் மற்றும் ரூ. 75,000 பராமரிப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சி 59 எம்எல்ஏக்களுக்கும் கார் வேண்டாம் என அறிவித்தார்.
அதன் பிறகு பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும் என பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒரு ஏழை எம்.எல்.ஏ கேட்டதால்தான் முதலமைச்சர் விஜய் உடனடியாக செவி சாய்த்து கார் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.
Watch | விசிகவைச் சேர்ந்த ஏழை எம்.எல்.ஏ. என ஜோதிமணியைக் குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தனது வேட்புமனுவில் ரூ.85 லட்சம் மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகவும், கார் இருப்பதாகவும் எம்.எல்.ஏ. ஜோதிமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது#SunNews | #TNAssembly | #VCK |… pic.twitter.com/LZZ2Frvc1n
— Sun News (@sunnewstamil) August 21, 2026
சிபிஐ உறுப்பினர்களும் கார் இல்லாமல் கஷ்டப்படுவதாக அவர் கூறினார். அப்போது பேசிய சிபிஐ உறுப்பினர் தளி இராமச்சந்திரன் எங்களுக்கு கார் வேண்டாம் என்று அறிவித்தார். மேலும் ஏழை எம்.எல்.ஏ என்று அவர் விசிக எம்எல்ஏ ஜோதி மணியை குறிப்பிட்ட நிலையில் அவருடைய சொத்து விவரம் வெளிவந்துள்ளது. அவர் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் தன்னிடம் toyota எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதன் மதிப்பு 9 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு அசையும் சொத்து 35 லட்சம் மதிப்பிலும் அசையா சொத்து 50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 85 லட்சம் சொத்து அவரிடம் உள்ளது. மேலும் இதேபோன்று டொயோட்டா கார் கேட்ட எம்எல்ஏ சண்முகத்திடம் பென்ஸ் கார் உட்பட நான்கு சொகுசு கார் இருப்பதும் ஆட்டோவில் வருவதாக கூறிய எம்எல்ஏ சபரியிடம் டிகர் கார் இருப்பதும் வேட்பு மனு தாக்கல் மூலம் தெரிய வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
