பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், பாதிரியார் ஆபிரகாம் என்பவருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நெல்லை பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலத்திற்குப் பிரார்த்தனைக்காக வந்த 4 சிறுமிகளை அங்குப் பணியாற்றி வந்த பாதிரியார் ஆபிரகாம் (47) பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளி ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 4 சிறுமைகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது