“ஒருமையில் பேசுவது, வாடா போடாவென பேசுவதை திமுகவினர் உடனடியாகத் தவிர்க்க வேண்டும். என்ன இது… பைத்தியம் மாதிரி பேசுறாங்க? பேசிக்கிட்டு இருக்கும்போதே அடிக்கக் கையை ஓங்குறாங்க!” என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான ஆவேசத்துடன் பேசினார்.
திமுக எம்.எல்.ஏ உடுமலை ஜெயக்குமாரின் பேச்சைச் சுட்டிக்காட்டி அவையில் பேசிய அவர், “தவெகவினரை கட்டுப்படுத்துவதற்கு (CONTROL செய்ய) நம் முதல்வர் விஜய்யின் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும்! ஆனால், திமுக உறுப்பினர் அடிக்கிறதுக்கு பாய்ந்துகிட்டு வர்றார்; கையை ஓங்கிட்டு வர்றார்,” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கடுமையாகச் சாடினார்.
அவையில் திமுக உறுப்பினரின் நடத்தையைக் கண்டித்து, ‘தளபதி’ விஜய்யின் கெத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசமாகப் பேசிய இந்தச் சம்பவம், சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பையும் சூடான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
