சென்னை தரமணியில் உள்ள நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவதைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதோடு, சக ஊழியர்களை மிரட்டும் அதிகாரியின் திமிரான செயல் தற்போது கடும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தரமணி நிலத்தடி நீர் மற்றும் நீர்வளத்துறை வளாகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பேற்ற T. தமிழ்செல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசியப் பண்டிகை நாள்களான சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் (2024 சுதந்திர தினம், 2025 குடியரசு தினம், 2025 சுதந்திர தினம், 2026 குடியரசு தினம் மற்றும் தற்போது அண்மையில் முடிந்த 2026 சுதந்திர தினம் என எப்போதுமே) ஒருமுறை கூட 50 அடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததில்லை என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு விடுமுறை நாள்களில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு, அலுவலக அரசு வாகனத்தைப் பயன்படுத்தி உடனடியாகத் தனது சொந்த ஊரான புதுச்சேரிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக ஊழியர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். சக

“>

பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலமுறை கொடி ஏற்றி வைக்குமாறு கோரிக்கை விடுத்தும், தனக்குச் சொந்த வேலைகள் இருப்பதாகக் கூறி அவர் அதனைத் துச்சமாக மதித்து மறுத்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்தவரான இவர், தற்போது மாநிலத்தில் அமைந்துள்ள புதிய தவெக அரசின் செல்வாக்கைக் குறிப்பிட்டு, “எங்கள் மாநிலம், எங்கள் ஊர் அமைச்சர்” எனக் கூறி சக ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் மிரட்டி வருவதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்து நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளராகத் பதவி உயர்வு பெறப்போவதாகத் தற்பெருமை பேசி வருவதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தேசியக்கொடிக்கும், தேசிய விழாக்களுக்கும் எவ்வித மரியாதையும் அளிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் தலைமைப் பொறியாளர் மீது அரசு உடனடியாகத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் தீவிரக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.