தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கலந்துகொண்ட அரசு விழா ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்துகொண்டது தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தொண்டர்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் அந்த நடிகை, தங்களைப் பற்றிய பதிவுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதோடு, கண்டனம் தெரிவிக்கும் கணக்குகளைத் தொடர்ந்து பிளாக் செய்து வருவதும் இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் பங்கேற்ற அரசு விழாவில் சர்ச்சைக்குரிய அந்த நடிகை கலந்துகொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்தது தவெக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் மற்றும் கடந்த காலச் சம்பவங்கள் தொடர்பான எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி அவர் பொதுவெளியில் வெளிப்படையாகத் தோன்றுவது பொதுமக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தங்களது தலைவரின் குடும்பப் பாரம்பரியத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாகக் கருதி, நடிகையின் நடவடிக்கைகளைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வரும் தவெக தொண்டர்களை அவர் தொடர்ச்சியாகத் தடை செய்து வருகிறார். இதன் மூலம், தங்களைப் பற்றிய விமர்சனங்களையும் தவெக தொண்டர்களின் மனநிலையைத் தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதை அவர் மறைமுகமாக உணர்த்துவதாக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தவெக தொண்டர்களின் பகிரங்கச் செய்தியாக, “இன்னும் 50 ஆண்டுகள் கடந்தாலும் தமிழக மக்களோ அல்லது தவெக தொண்டர்களோ உங்களை சங்கீதாவின் இடத்திற்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு வாபஸ் பெறப்பட்டு தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய இடத்தை மதிப்பதற்குப் பதிலாக, இதுபோன்று அரசு நிகழ்வுகளில் முன்னிலைப் படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“>

 

எக்ஸ் தளத்தில் நூற்றுக்கணக்கான கணக்குகளைத் தடுத்தாலும், தங்களது நியாயமான கோபத்தையும் கண்டனங்களையும் கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் இந்த விவகாரத்தில் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.