பெங்களூருவின் புகழ்பெற்ற கப்பன் பூங்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த நேரத்தில், இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார விடுமுறை என்பதால் வழக்கம் போல் ஏராளமானோர் கப்பன் பூங்காவிற்கு வருகை தந்திருந்தனர். அந்தப் பெருங்கூட்டத்திற்கு நடுவே திடீரென இரண்டு இளம் பெண்கள் மோதிக் கொண்டதுடன், சாலையில் வைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்தச் சண்டையை அங்கிருந்தவர்கள் தங்களது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
Two young women get into a fight on road at Cubbon Park
A fight broke out between two young women at #CubbonPark in #Bengaluru on Sunday, with the incident reportedly taking place amid a large crowd of visitors.
A video of the two women physically fighting was… pic.twitter.com/YU55DJ29W3
— Mahesh M Goudar (@IamMGoudar) August 17, 2026
“>
இரு பெண்களுக்கு இடையே திடீரென இந்த மோதல் வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இதுகுறித்து போலீசார் அல்லது அதிகாரப்பூர்வ தரப்பில் இருந்து மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
