பிரபல பன்னாட்டு உணவக பிராண்டான கிளை ஒன்றில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், சுமார் 640 கிலோ அழுகிய இறைச்சி மற்றும் பூஞ்சை காளான் படர்ந்த காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற உணவகம் என்ற நம்பிக்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் நாடிச் சென்று உண்ணும் ஒரு இடத்தில், இத்தனை மோசமான சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையானது, பன்னாட்டு உணவகங்களின் உண்மையான பின்னணியையும், அவர்கள் உணவின் சுகாதாரத்தில் காட்டும் அலட்சியத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சோதனையின் போது உணவகத்தின் சமையலறை மற்றும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் பல நாட்கள் பழமையானதாகவும், துர்நாற்றம் வீசும் நிலையிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சமையலுக்குப் பயன்படுத்த வைத்திருந்த காய்கறிகளில் பூஞ்சை காளான் படர்ந்து, மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற முறையில் இருந்ததைக் கண்டு அதிகாரிகளே முகம் சுளித்துள்ளனர். இந்த அசுத்தமான மற்றும் அழுகிய மூலப்பொருட்களைக் கொண்டே வாடிக்கையாளர்களுக்குச் சுவையான உணவுகள் என்ற பெயரில் தொடர்ந்து பரிமாறப்பட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட 640 கிலோ அழுகிய உணவுகளை அதிகாரிகள் உடனடியாகக் கைப்பற்றி அழித்ததுடன், உணவகத்திற்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் பெரிய உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துடன் இப்படித் துணிச்சலாக விளையாடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.
மேலும் உணவுப் பிரியர்களின் நம்பிக்கையை முதலீடாக வைத்து, அவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் நாம் உண்ணும் உணவு சுத்தமானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நுகர்வோருக்கும் உண்டு என்பதை நினைவூட்டும் இந்தச் சம்பவம், பிரபலமான பிராண்ட் என்ற பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தான நிஜத்தைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த உணவகத் துறைக்கே எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
Mangaluru, Karnataka: Food safety officials conducted a surprise raid at a KFC outlet in Mangaluru’s City Centre on K.S. Rao Road following a customer complaint alleging that they received spoiled, foul-smelling chicken ordered online.
During the inspection of the kitchen,… pic.twitter.com/K0InEr2ghz
— ANI (@ANI) August 15, 2026
“>
