கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 4 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (31) என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிஞ்சு சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து ஆத்திரமடைந்த சிறுமியின் பாட்டி, அரிவாளை எடுத்துக் கொண்டு அந்த நபரைத் தேடிச் சென்றுள்ளார்.
அங்கு நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிச் சென்று சிறுமியின் பாட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த சுற்றியிருந்த மக்களும் கொதித்தெழுந்து, குற்றஞ்சாட்டப்பட்ட மாணிக்கத்தை வளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், படுகாயமடைந்த மாணிக்கத்தை மக்கள் அனைவரும் சேர்ந்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, காயமடைந்த மாணிக்கத்திற்கு சிகிச்சை அளிப்பதுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு எதிராகப் பாட்டி நடுரோட்டில் அரிவாளால் வெட்டியதும், பொதுமக்கள் அவரைத் தாக்கி போலீசில் ஒப்படைத்த சம்பவமும் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
