சிங்கம் என்றாலே கம்பீரமான தோற்றமும், வேட்டையாடும் காட்சிகளும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சிங்கத்தின் வித்தியாசமான செயல்பாடு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொலியில், சிங்கம் ஒன்றுக்கு பச்சைக் காய்கறி வழங்கப்படுகிறது. வழக்கமாக இறைச்சியை உண்ணும் சிங்கம், தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த காய்கறியை பார்த்து குழம்பும் காட்சியே தற்போது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
வைரல் வீடியோவில், ஒரு சிங்கம் தனது அடைப்புப் பகுதியில் கம்பீரமாக சுற்றித் திரிகிறது. அப்போது அதன் கவனம் அங்கு வைக்கப்பட்டிருந்த பச்சை நிற காய்கறியின் மீது செல்கிறது. இதுவரை அதுபோன்ற உணவை பார்த்திருக்காதது போல, சிங்கம் சில நொடிகள் அதை உற்றுப் பார்க்கிறது. பின்னர் தனது பெரிய பாதத்தால் அந்தக் காய்கறியைத் தொட்டு, அது உணவா அல்லது வேறு ஏதாவது பொருளா என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறது. சிங்கத்தின் இந்த வித்தியாசமான நடவடிக்கைதான் வீடியோவை சுவாரசியமாக்கியுள்ளது.
View this post on Instagram
காய்கறியை பார்த்தவுடன் சிங்கம் காட்டும் முகபாவனைகள் தான் இணையவாசிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. முதலில் சந்தேகத்துடன் அதை பார்த்து, பின்னர் தொட்டு பார்த்து, இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது போன்ற அதன் ரியாக்ஷன் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. இறைச்சியை உண்ணும் சிங்கத்திடம் திடீரென பச்சைக் காய்கறியை கொடுத்தால் இப்படித்தான் இருக்கும் போல என பலரும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில நொடிகளே ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சிங்கத்தின் கம்பீரமான தோற்றத்துக்கு மாறாக, காய்கறியை பார்த்தபோது அது வெளிப்படுத்தும் குழப்பமான பாவனைகள் பலரையும் சிரிக்க வைத்துள்ளன. விலங்குகளின் எதிர்பாராத செயல்பாடுகள் இணையத்தில் எப்போதும் தனி கவனத்தைப் பெறும் நிலையில், இந்த சிங்கத்தின் ‘காய்கறி அனுபவமும்’ தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது.
