சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் அணுகுமுறை மற்றும் உடற்கட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளில் முற்றிலும் மாறியுள்ளதற்கு விராட் கோலியே முழுமுதல் காரணம் என்று சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விராட் கோலியின் வருகைக்குப் பிறகு, இந்திய அணியில் எப்போதுமே பின்வாங்கும் பழக்கம் முற்றிலுமாக மாறிவிட்டது. எதிரணி வீரர்கள் யாராவது சீண்டினாலோ அல்லது வார்த்தைப் போரில் ஈடுபட்டாலோ, அதற்கு இரண்டு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கும் மனநிலையை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த மைண்ட்செட்டையும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றியை நோக்கிச் செல்லும் பாதையாக மாற்றிமைத்த பெருமை விராட் கோலியையே சாரும் என அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். மைதானத்தில் சவால்களை எதிர்கொள்ளும் விதமும், எதிரணிகளுக்குப் பயப்படாமல் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரமும் கோலியின் கேப்டன்ஷிப் காலத்தில்தான் இந்திய அணியில் ஆழமாக வேரூன்றியது.

“>

 

கோலி இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய இந்த ஆளுமை மாற்றம் குறித்த அஸ்வினின் இந்தக் கருத்துக்கள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாகவும், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றும் வருகிறது.