வயது என்பது சாதனைக்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 97 வயது பெட்டி ப்ரோமேஜ்  என்ற மூதாட்டி உலகையஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளார். ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்து மீண்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, அவர் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்று ‘விங் வாக்கிங்’ என்ற சாகசத்தை செய்து தனது சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

செல்டன்ஹாம்  பகுதியைச் சேர்ந்த பெட்டி ப்ரோமேஜ், சைரன்செஸ்டர் பகுதியில் உள்ள RFC ரெண்ட்கோம் ஏர்ஃபீல்டில்  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாகசத்தை அவர் மேற்கொண்டபோது, அவரின் வயது 97 ஆண்டுகள் மற்றும் 127 நாட்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

 

A post shared by The Female Quotient® (@femalequotient)

இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு 93 வயதில் உலகின் வயதான பெண் விங் வாக்கர் என்ற கின்னஸ் சாதனையை பெட்டி ப்ரோமேஜ் படைத்திருந்தார். தற்போது தனது சொந்த சாதனையையே அவர் மீண்டும் முறியடித்துள்ளார். 87 வயதில் இருந்து இதுவரை மொத்தம் 6 முறை விங் வாக்கிங் சாகசத்தை அவர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நல சவால்களையும், வயதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெட்டி ப்ரோமேஜின் துணிச்சல் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. வாழ்க்கையை உற்சாகமாக வாழ வேண்டும் என்ற அவரது எண்ணமும், சாதனை படைக்கும் ஆர்வமும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.