தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 ஆம் ஆண்டுக்கான கன்னிப் பொது நிதிநிலை அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு புதிய முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கமான நலத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்களின் அன்றாடப் பாதுகாப்பிலும் எதிர்கால நலனிலும் தவெக அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள புதிய வடிவத்திலான சைக்கிள்களுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேகமாக ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளும் சேர்த்து வழங்கப்படவுள்ளன. இன்றைய தலைமுறையினரை வெறும் வாக்காளர்களாகப் பார்க்காமல், நாட்டின் தூண்களாகவும் திறமையான எதிர்காலத் தலைவர்களாகவும் மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்தரமான பொருட்கள் மற்றும் சலுகைகள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பது இந்த பட்ஜெட் மூலம் வெளிப்பட்டுள்ளது.

“>

 

மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்குக் கட்டியம் கூறும் இந்தச் சிறப்பான அறிவிப்புகளுக்குப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.