தமிழ்நாட்டின் மாறிவரும் அரசியல் களம் மற்றும் புதிய அரசாங்கத்தின் எழுச்சி குறித்துப் பிரபல நடிகர் ஆர். மாதவன் தனது மனம் திறந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் நேர்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வரவேற்றுள்ள அவர், தனது நீண்டகால நண்பரான விஜய்யின் புதிய அரசியல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, “இனிமேல் நான் அவரை ‘சிஎம் விஜய்’ என்றுதான் அழைக்க வேண்டும்” என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நண்பரின் இந்தச் சாதனை ஒருபுறம் இருக்க, தானும் அரசியலில் களமிறங்குவாரா என்ற நீண்டகால வதரிகளுக்கும் ஊடகங்களின் கேள்விகளுக்கும் நடிகர் மாதவன் இந்த உரையாடலின் மூலம் திட்டவட்டமான முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது தற்போதைய மற்றும் எதிர்காலக் திட்டங்களில் அரசியல் எந்த இடத்திலும் இல்லை என்றும், சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
R. Madhavan has reacted to Tamil Nadu’s changing political landscape! ✨ The actor welcomed the possibility of positive change, congratulated his longtime friend by saying,
“Now I have to call him CM Vijay,” and made it clear that politics isn’t on his career wishlist. 🗳️… pic.twitter.com/fskN1GdEaN
— MissMalini (@MissMalini) August 5, 2026
“>
மாதவனின் இந்தப் பேட்டியானது தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
