தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கொலை செய்யப்பட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் என கூறப்படுகிறது. அவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நபருக்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகராறு காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A 37-year-old auto driver-turned-garment seller, Md Fasi Ahmed Amer, was hacked to death in full public view, allegedly by his neighbour due to personal grudges at Singareni Colony in Saidabad on Tuesday morning.

The victim succumbed to injuries while being shifted to Osmania… https://t.co/StgmlD29eS pic.twitter.com/wOK4FM3pm5

— Hate Detector 🔍 (@HateDetectors) August 5, 2026

சம்பவத்தின் போது பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.