உத்தரப் பிரதேசத்தில் உள்ள இரயில்வே கிராஸிங்கில் அதிவேகமாக வந்த இரயில் மீது மோதிய பசு ஒன்று, எந்தவித காயமும் இன்றி அதிசயமான முறையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேசத்தின் பலியா அட்டாரியா இரயில்வே கேட் பகுதி எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இரயில் வருவதற்காகக் கேட் மூடப்பட்டிருக்க, மக்கள் அனைவரும் அது கடந்து செல்வதற்காகக் காத்திருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென இரயில் தண்டவாளத்திற்கு நடுவே ஒரு பசு வந்து நின்றது. அதேவேளையில், கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகமாக வந்த இரயிலும் அந்தப் பகுதியைக் நெருங்கியது. தண்டவாளத்தில் நின்ற பசுவை விலக்க யாருக்கும் போதிய அவகாசம் கிடைக்கவில்லை.  பலரும் என்ன நடக்குமோ என்று தங்களின் கண்களைப் பொத்திக் கொண்டனர். வேகமாக இரயில், தண்டவாளத்தில் நின்ற பசுவின் மீது உரசியது. இரயிலின் இன்ஜின் அல்லது பெட்டியின் ஒரு பகுதி அந்தப் பசுவின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதைப் பார்த்த பொதுமக்கள், “அவ்வளவுதான், பசு பிழைக்க முடியாது” என்று கதறிவிட்டனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Arvind yadav (@arvind714yadav)

ஆனால், அடுத்த நொடியே அங்கே ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது. இரயில் முழுமையாகக் கடந்து சென்ற பிறகு, அடிபட்டு இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பசு, எந்தவிதப் பெரிய காயமும் இன்றித் தானாகவே சுதாரித்து எழுந்து நின்றது. அதைக் கண்ட பொதுமக்களுக்குத் தங்களது கண்களையே நம்ப முடியவில்லை. எந்தத் தயக்கமும் இன்றி அமைதியாக தண்டவாளத்தை விட்டு விலகி ஓரமாகச் சென்ற அந்தப் பசுவை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போன்களில் தற்செயலாகப் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, இது இது கடவுள் சிவபெருமானின் நேரடித் திருவிளையாடல் மற்றும் அருள்; இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து தப்பியிருக்கவே முடியாது” என்று அப்பகுதி மக்கள் சிலிர்ப்புடன் தெரிவித்தனர்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள இந்தச் சுவாரசியமான வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆச்சரியமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.