எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அதிரடி கைதைத் தொடர்ந்து, அதைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலியில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு முக்கியச் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் ஒருவர், சாலை மறியலால் தனக்கு ஏற்பட்ட தாமதம் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த திமுகவினர், அந்த இருசக்கர வாகன ஓட்டியைப் பார்த்து எல்லைமீறி ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, அவர் மீது திடீரெனத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் தலையிட்டு, ஆத்திரமடைந்த திமுகவினரைத் தடுத்து நிறுத்தி, அந்த இருசக்கர வாகன ஓட்டியைப் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… pic.twitter.com/xArFYrpZMk
— Rajmohan (@imrajmohan) August 4, 2026
திமுகவினர் பொதுமக்களிடம் அராஜகமாக நடந்துகொண்ட இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
