கலைக்கும் திறமைக்கும் வயது ஒரு தடடையே இல்லை என்பதைச் சமூக வலைதளங்கள் தினமும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், 90-களின் புகழ்பெற்ற பாடகியான ஃபால்குனி பாட்டக்கரின் ‘மைனே பாயல் ஹை சன்காய்’ என்ற மெல்லிசைப் பாடலுக்கு, பெண்மணி ஒருவர் மிகவும் சுட்டித்தனமாகவும் அழகாகவும் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அன்றாட வீட்டு வேலைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் கடந்து, தனது திறமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய அந்தப் பெண்மணியின் நடனம், பார்ப்போர் அனைவரின் மனதையும் சட்டென்று கவர்ந்துவிட்டது. பிரபலமான அந்தப் பாடலின் அழகான வரிகளுக்கேற்ப, அவர் வெளிப்படுத்திய நேர்த்தியான நடன அசைவுகளும், முகத்தில் தவழ்ந்த புன்னகையும் எக்ஸ்பிரஷன்களும் தான் இந்த வீடியோவின் முதன்மை சிறப்பம்சமாகும்.
இளைஞர்களுக்கு இணையான ஆற்றலோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும் அவர் ஆடிய அந்த நடனம், வயது என்பது வெறும் எண்தான் என்பதை மீண்டுமொருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு நடுவே, தனக்குப் பிடித்தமான விஷயத்தைச் செய்து மகிழ்ச்சியடையும் அவரின் இந்த அணுகுமுறை, பலருக்கும் ஒரு நேர்மறை ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் வழங்கி வருகிறது.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியான குறுகிய நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் கருத்துக்களையும் அள்ளிக்குவித்து வருகிறது. நெட்டிசன்கள் பலர் அந்தப் பெண்மணியின் நடனத் திறமையையும், அவரின் உற்சாகமான மனநிலையையும் மனதாரப் பாராட்டி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
எந்தவித ஆடம்பரமும் இன்றி, தன் இயல்பான திறமையால் இணையவாசிகளின் இதயங்களைக் கொள்ளையடித்த இந்த ஆன்ட்டியின் நடன வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவிலான ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
