குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் சோஜித்ரா தாலுக்காவிற்கு உட்பட்ட த்ரம்போவாட்-கதியாரபுரா பகுதியில் நள்ளிரவில் வழக்கம் போல் ஒரு குடும்பம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் வெளியே நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் பாலாபாய் சௌகான் என்பவர் என்னவென்று பார்ப்பதற்காக மெல்ல எழுந்து வெளியே சென்றுள்ளார்.
வீட்டிற்குள் உள்ள குளியலறையின் கதவைத் திறந்த அவருக்குக் காத்திருந்தது மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அந்த பாத்ரூமிற்குள் சுமார் 7 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான முதலை ஒன்று அமைதியாக அமர்ந்திருந்தது. திடீரென வீட்டிற்குள் ராட்சத முதலை புகுந்ததைக் கண்ட குடும்பத்தினரும் அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் பீதியடைந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.
View this post on Instagram
உடனடியாக இது குறித்து வனத்துறை மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த நிபுணர்கள் குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அந்தப் பயங்கரமான முதலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு அந்த முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து அருகில் உள்ள ஏரி ஒன்றில் கொண்டுபோய் விட்டதன் பின்னரே அந்தப் பகுதி மக்களும் குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
