பெங்களூரு மாநகரில் வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்த “பஞ்சர் மாஃபியா” கும்பலின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் செல்பவர்களின் வாகனங்களை வேண்டுமென்றே பஞ்சர் ஆக்கி, அதன்மூலம் தங்களின் பஞ்சர் கடைகளுக்கு முறைகேடான முறையில் அதிக வருமானம் ஈட்டுவதற்காக ஒரு கும்பல் திட்டமிட்டு இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்தது. பொதுமக்களின் அன்றாடப் பயணத்தைப் பாதகமாக்கி, அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இந்த கும்பலின் அக்கிரமம் தற்போது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியை நோக்கும்போது, பெங்களூருவின் முக்கியச் சாலைப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் சிலர், பைகளில் மறைத்து வைத்திருந்த ஆணிகளையும் கூர்மையான பொருட்களையும் சாலை முழுவதும் வீசிச் செல்லும் திடுக்கிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளன.
அந்தச் வழியே பயணிக்கும் கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களின் டயர்களும் பஞ்சராகி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்துச் சந்தேகமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்த பஞ்சர் மாஃபியாவின் கொடூரச் சதி வெளிச்சத்திற்கு வந்தது.
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைக் தீவிரமாகக் கருதிய பெங்களூரு காவல்துறையினர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்களை அடையாளங் கண்டு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் செல்பவர்களின் அவசரத்தையும், அவர்களின் உயிரையும் துச்சமாக மதித்து, லாப நோக்கத்திற்காக மட்டுமே செயல்பட்ட இந்த அநாகரிகக் கும்பலின் செயல் பெங்களூரு மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
ಅವರು ರಸ್ತೆಯಲ್ಲಿ ಮೊಳೆಗಳನ್ನು ಚೆಲ್ಲುತ್ತಾ ಸಾಗಿದ್ದಾರೆ. ಸಾಕ್ಷ್ಯದ ಸುಳಿವು ನಮ್ಮ ಸಿಸಿಟಿವಿ ಕ್ಯಾಮೆರಾಗಳಲ್ಲಿ ಸೆರೆಯಾಗಿದೆ.
ಕೆಂಪು ಬಣ್ಣದ ಬೈಕ್ನಲ್ಲಿ ಬಂದ ಇಬ್ಬರು ವ್ಯಕ್ತಿಗಳು ರಸ್ತೆಯಲ್ಲಿ ಉದ್ದೇಶಪೂರ್ವಕವಾಗಿ ಮೊಳೆಗಳನ್ನು ಎಸೆಯುತ್ತಿರುವುದು ದಾಖಲಾಗಿದೆ. ಎಎನ್ಪಿಆರ್ (ANPR) ದೃಶ್ಯಾವಳಿಗಳ ಆಧಾರದ ಮೇಲೆ ಪ್ರಕರಣ… pic.twitter.com/SwzwE28JE4— ಬೆಂಗಳೂರು ಸಂಚಾರ ಪೊಲೀಸ್ BengaluruTrafficPolice (@blrcitytraffic) July 29, 2026
“>
