சென்னையின் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்த்து பொதுமக்களுடன் நெருக்கமாக இருக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி சென்னை நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், சுற்றியுள்ள பயணிகளுடனும் பொதுமக்களுடனும் மிகவும் இயல்பாகப் பேசி உரையாடினார்.

இந்த எதிர்பாராத மெட்ரோ பயணத்தின் போது, ரயிலில் பயணம் செய்த ஒரு வயதான மூதாட்டி முதலமைச்சர் விஜய்யைக் கண்டதும் வியந்து போய் ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். பாசத்துடன் அந்த மூதாட்டி தழுவிய அந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்ததுடன், தற்போது சமூக வலைதளங்களிலும் பெருமளவில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி மக்களில் ஒருவராக மெட்ரோ ரயிலில் அமர்ந்து அவர் பயணம் செய்த விதம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எளிய மக்களுடன் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவது போலவும், அவர்களின் அன்பைப் பெற்றது போலவும் அமைந்த இந்த அதிரடி மெட்ரோ விசிட் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் தற்போது ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.