மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர அணையில் பாய்ந்து மூழ்கியதில் காரில் பயணித்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவமானது மத்திய பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த கார் திடீரெனச் சாலையை விட்டு விலகிச் சென்று, அருகில் இருந்த தடுப்புகளைத் தாண்டி நீரில் மூழ்கியது.
https://x.com/PTI_News/status/2080948552268980724?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080948552268980724%7Ctwgr%5Eb9ce35f2980115d618af36b35bcaa107194435d2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Findia%2Fnews%2Fmadhya-pradesh-5-killed-after-speeding-car-plunges-into-roadside-dam-in-rajgarh-video-7531775.html
சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும் உடனடியாக அணைக்குள் மூழ்கிய காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீவிர போராட்டத்திற்குப் பிறகு நீரிலிருந்து கார் மீட்கப்பட்ட நிலையில், அதற்குள் இருந்த ஐந்து நபர்களும் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இவ்விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்துக்கான முதன்மைச் காரணி அதிவேகமா அல்லது வேறு ஏதேனும் எந்திரக் கோளாறா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் அன்றைய தினத்தில் நடந்த நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
