அமெரிக்காவில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு செல்லப் பிராணி செய்த விபரீத செயல், ஒரு வீட்டையே சாம்பலாக்கியதோடு அங்கிருந்த மூன்று அப்பாவி ஜீவன்களின் உயிரையும் பறித்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று சமையலறையில் செய்த ஒரு சிறு தவறு, ஒட்டுமொத்த வீட்டையும் தீக்கிரையாக்கியுள்ளது.
இந்த விபத்து அங்கிருந்த மற்ற செல்லப் பிராணிகளின் உயிருக்கு எமனாக முடிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று சமையலறையில் இருந்த டோஸ்டரை (Toaster) தவறுதலாக ஆன் (On) செய்துள்ளது. இதனால் சில நிமிடங்களிலேயே சமையலறையில் தீப்பற்றி எரியத் தொடங்கி, வீடு முழுவதும் மளமளவென பரவியுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் வீட்டிற்குள் இருந்த 3 செல்லப் பிராணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. அதே நேரத்தில், தீ விபத்திற்குக் காரணமான ‘போ’ (Bo) என்ற நாயும், ‘ஆடிஸ்’ (Addies) என்ற மற்றொரு நாயும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
A family dog caused a devastating fire in Maryland, destroying a home and leading to the death of three pets. Home security footage shows the dog jumping on the kitchen counter, accidentally turning on a toaster.
MORE: https://t.co/nX6FtE2Etp pic.twitter.com/YfiA6Wy023— NewsNation (@NewsNation) July 15, 2026
வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவை ஆய்வு செய்தபோதுதான், விளையாட்டாக நாய் செய்த அந்த ஒரு தவறான செயல் தான் இந்த பெரும் விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்து அனைவரையும் உறைந்து போகச் செய்துள்ளது.
