பெங்களூருவில், கடந்த சில வாரங்களாகக் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வசித்து வந்த பெண்கள் மத்தியில் விவரிக்க முடியாத பயமும், பெரும் குழப்பமும் நீடித்து வந்தது. அதற்குப் பின்னால் இருந்த ஒரு வாலிபரின் மிக விசித்திரமான மற்றும் அருவருப்பான சைக்கோத்தனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து, காவல்துறையினரையே தலைசுற்ற வைத்துள்ளது.
பெங்களூரு, பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், தங்களது ஆடைகளை வழக்கம்போல துவைத்துக் காயப்போட்டு வந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் காயப்போடப்படும் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. அதைவிட விசித்திரம் என்னவென்றால், மறுநாள் காலையில் பார்த்தால் காணாமல் போன அதே உள்ளாடை, மீண்டும் அதே இடத்தில் காயப்போடப்பட்டிருக்கும்.
“காயப்போட்ட உள்ளாடை எப்படி நைட்டோட நைட்டா காணாம போயிட்டு மறுபடியும் காலையில அதே இடத்துக்கு வருது?” என்று குழம்பிய பெண்கள், இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கத் தங்களது மொட்டைமாடி மற்றும் பால்கனி பகுதிகளில் ரகசிய சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த பெண்களுக்குக் கடும் அதிர்ச்சியும் அருவருப்பும் காத்திருந்தது.
அதிகாலை 3 மணி அளவில் பூனைப் போல பதுங்கி வரும் ஒரு வாலிபர், தான் ஏற்கனவே திருடிச் சென்ற உள்ளாடையை மீண்டும் துணி காயப்போடும் கம்பியிலேயே மாட்டிவிட்டு, அதற்குப் பதிலாக அன்றைய தினம் துவைத்துக் காயப்போடப்பட்டிருந்த வேறொரு புதிய உள்ளாடையைத் திருடிச் செல்வது கேமராவில் அப்பட்டமாகப் பதிவாகியிருந்தது.
பெண்கள் அளித்த புகாரின் பேரில் களமிறங்கிய போலீஸார், சிசிடிவி பதிவுகளை வைத்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்ஹுசைன் (23) என்ற வாலிபரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் போலீஸாரையே அதிர வைத்தன. அந்த வாலிபர் தீவிரமான உளவியல் ரீதியான பாலியல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை ஒரு இரவு முழுவதும் தான் அணிந்து கொண்டு பாலியல் சுகம் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பின்னர் அந்த ஆசை தீர்ந்ததும், மறுநாள் அதிகாலையில் அதனைத் துவைத்த இடத்திலேயே கொண்டு போய் மாட்டிவிட்டு, வேறொரு பெண்ணின் உள்ளாடையைத் திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் அவரிடம் பெண் போன்ற சில விசித்திர நடத்தைகள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பெங்களூருவில் வேறு எங்கெல்லாம் இவர் இதேபோல கைவரிசை காட்டியுள்ளார் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
