தன் மகனின் கல்விக்காகத் தனது எஸ்.யு.வி கார் வாங்கும் வாழ்நாள் கனவைத் தியாகம் செய்த தந்தைக்கு, ஐஐஎம் பட்டதாரியான மகன் ஒரு புதிய சொகுசு காரைப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் உயர்விற்காகச் செய்யும் தியாகங்களுக்கு, ஒரு மகன் காட்டியுள்ள இந்த நன்றியுணர்வு கலந்த அன்பு ஒட்டுமொத்த இணையவாசிகளையும் உருக வைத்துள்ளது. அந்த இளைஞன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அவனது தந்தை தனக்கு மிகவும் பிடித்த எஸ்.யு.வி காரை வாங்கும் ஆசையைக் கைவிட்டு, அந்தப் பணத்தை மகனின் உயர்கல்விக்காகப் பயன்படுத்தப் போவதாகப் பேசியதை தற்செயலாகக் கேட்டுள்ளார்.
Father sacrificed his SUV dream for child’s education; IIM grad son surprises him with a new car https://t.co/rqzYzUDG7R
“>
அன்றே தன் தந்தையின் தியாகத்தை மனதில் ஆழப் பதித்துக் கொண்ட அந்த மகன், வெறியோடு படித்து இந்தியாவின் மிக உயரிய ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பட்டமும் பெற்றார். தற்போது நல்ல வேலையில் அமர்ந்தவுடன், தனது தந்தை அன்று ஆசைப்பட்ட அதே கனவு வாகனத்தை அவருக்குப் பரிசளித்து அசத்தியுள்ளார். மகன் தன் தந்தைக்குக் காரைப் பரிசளிக்கும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியுள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இது ஒரு பெருமைமிக்க தந்தை மற்றும் மகனுக்கான தருணம்” என்றும், “இப்படி ஒரு தியாகம் செய்த தந்தையைப் பெற நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றும் தங்களது வாழ்த்துகளையும் எமோஜிகளையும் பறக்கவிட்டு இணையத்தில் இந்த வீடியோ லச்சக்கணக்கில் லைக்குகள் பெற்று வருகின்றன.
