வங்கதேசத்தின் நரசிங்டி மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக 32 வயதான பெண் ஒருவர் தனது மூன்று மாதமே ஆன பிறந்த குழந்தையை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் குழந்தையின் காலைப் பிடித்து முறுக்கிய கொடூரக் காட்சியை, குழந்தையின் தாயே தனது மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ முதலில் உறவினர்களுக்குப் பகிரப்பட்டு, பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் கண்டனங்களும் ஆத்திரமும் எழுந்துள்ளன.
What has happened to today’s women?
A woman broke the leg of a sleeping newborn baby. 😢
Do the same with that w!tch. Never have an iota of mercy for such mcs !!!! pic.twitter.com/rfCE7wOh9R
— Simpu Singh (@Simpu_SinghIND) July 15, 2026
“>
இச்சம்பவம் குறித்து காவல் நிலைய ஆய்வாளர் முகமது கமல் உசேன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூன்று குடும்ப உறுப்பினர்களை விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளனர்.
மேலும், வீடியோ பதிவு செய்யப்பட்ட மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக ஊடகங்களில் குழந்தையின் கால் உடைந்துவிட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், குழந்தையின் பெற்றோர் அதை மறுத்துள்ளனர். குழந்தைக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் தாக்குதல் நடந்தது உண்மைதான் என்று அவர்கள் போலீசாரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்குடும்பத்தினர் தங்களுக்குள் சமரசமாகப் போக முயன்றபோதிலும், வீடியோவைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் நெட்டிசன்கள் அக்குழந்தைக்கு நீதி கேட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றனர். அத்துடன், அக்குழந்தையைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த தாயின் செயல் குறித்தும் இணையத்தில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
