பெங்களூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது எப்போதும் தீராத போக்குவரத்து நெரிசல், ஐடி நிறுவனங்களின் பரபரப்பு மட்டும் தான். ஆனால், இந்த அவசர உலகிற்கு மத்தியிலும் பெங்களூரு நகர மக்கள் தங்களுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் பேரன்பையும், விருந்தோம்பல் பண்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், பெங்களூருவில் தனக்குக் கிடைத்த மிக உன்னதமான மனிதநேய அனுபவத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் பயணித்த ஆட்டோவின் ஓட்டுநர், ஒரு வாடிக்கையாளராக மட்டும் அவரைப் பார்க்காமல், மிகவும் பண்போடும் உண்மையான அக்கறையோடு நலம் விசாரித்து, அவர் பாதுகாப்பாக இலக்கை அடைவதை உறுதி செய்துள்ளார். அந்நிய தேசத்தில் எதிர்பாராத விதமாகக் கிடைத்த இந்த அன்பான கவனிப்பால் நெகிழ்ந்து போன அந்த அமெரிக்கர், அந்த ஆட்டோ ஓட்டுநருடன் தனக்கு நடந்த உரையாடலை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Chris Rodriguez • Travelwithchris (@whichchris_)

“>

பெங்களூரு மக்களைப் போல யாரும் இவ்வளவு அன்பைக் காட்டுவதில்லை” என்று அந்தப் பயணி உருகிப்போய் எழுதியுள்ள பதிவு, லட்சக்கணக்கான இணையவாசிகளின் இதயங்களைத் தொட்டுள்ளது. இந்த வைரல் பதிவை தொடர்ந்து, பெங்களூருவில் வசிக்கும் பலரும் தங்களுக்கு அவசர காலங்களிலும், அறிமுகமில்லாத சூழல்களிலும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் மற்றும் முன்பின் தெரியாத எளிய மனிதர்கள் செய்த நெகிழ்ச்சியான மனிதநேய உதவிகள் குறித்து தங்களது சொந்த அனுபவங்களை நினைவுகூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.