இன்று ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில் கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரை குறைந்து, ஒரு சவரன் தங்கம் 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் நேற்றைய விலையிலிருந்து 50 ரூபாய் குறைந்து, இன்று 13,150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த திடீர் விலை சரிவு, நகை வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்த தங்கம் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசன் மற்றும் சுப காரியங்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நேரத்தில் சரிவைச் சந்தித்திருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் பொருளாதார நிம்மதியைத் தந்துள்ளது. இதனால் இன்று நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க
