திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான குதிரைபேர குற்றச்சாட்டுகளை அடுக்கினார். “மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி பல்வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தற்போதைய சூழலில் குதிரைபேரம் தீவிரமாக நடந்து வருகிறது என்றும், இந்த குதிரைபேர வேலைகளில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மிக பிசியாக ஈடுபட்டு வருகிறார்” என்றும் கூறி தமிழக அரசியலில் பெரும் வெடிகுண்டை தூக்கிப் போட்டார்.

​மேலும் பேசிய அவர், தமிழக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையோ, நலத்திட்டங்களையோ செய்யாமல், தங்களுடன் இருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பதவிகளை வாரி வழங்குவதிலேயே தற்போதைய ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் குறியாக இருக்கிறார்கள் என்று கடுமையாகச் சாடினார். நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி மற்றும் நேரடியான குதிரைபேரக் குற்றச்சாட்டு தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.