பெங்களூரு நகரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான செய்தியைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. பெண் ஒருவர், அதிகாலை 5 மணிக்கு நகரின் வீதிகளில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும் “வானம் இன்னும் இருட்டாகத்தான் இருக்கிறது, ஆனால் மனதில் எந்தவித பயமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் தனியாக நடமாடுவதற்கு பெங்களூரு ஏன் மிகவும் பாதுகாப்பான நகரம் என்று அழைக்கப்படுகிறது என்பதை இந்த அனுபவத்தின் மூலம் தான் நேரடியாக உணர்ந்ததாகப் பாராட்டியுள்ளார். இவரது இந்த நெகிழ்ச்சியான பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

“>

இந்நிலையில் பலரும் இந்த கருத்தை வழிமொழிந்து, “போக்குவரத்து நெரிசலை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கும், அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் பெங்களூரு ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பான நகரம்” என கமெண்ட்களில் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.