சென்னையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 115200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
