பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில், 82 வயது முதியவர் ஒருவர் தனது முதியோர் ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காகப் பொதுச் சேவை மையத்திற்குச் சென்றபோது, அவரது வங்கிக் கணக்கில் கற்பனைக்கு எட்டாத வகையில் சுமார் 759 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்த வினோதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமேஸ்வர் மிஸ்ரா என்ற கவிஞரான அந்த முதியவர், தனது மாற்றுத்திறனாளி மகனின் வங்கிக் கணக்கையும் சோதித்துப் பார்த்தபோது, அதிலும் இதேபோன்று அசுரத்தனமான தொகை காட்டியுள்ளது.
இருவரின் கணக்குகளையும் சேர்த்து மொத்தம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு காட்டியதைக் கண்டு முதியவரும், பொதுச் சேவை மைய ஊழியரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை விளக்க வேண்டும் என முதியவர் பொதுவெளியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
