இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிரபல டிராவல் பிளாக்கரான கிலுபா ல்யுபோவ் என்பவர், புது டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன் ஒன்றிற்குள் சென்று ஃபேஷியல் மசாஜ் செய்துகொண்ட வினோதமான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகப் பெண்கள் தங்களது அழகுப் பராமரிப்பிற்காகப் பிரத்யேக பியூட்டி பார்லர்களுக்குச் செல்லும் நிலையில், இந்த ரஷ்யப் பெண் சற்று வித்தியாசமாக ஆண்கள் மட்டுமே செல்லும் சலூன் கடைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஊழியர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அவரை வரவேற்று, வெறும் 1 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹95.20) கட்டணத்தில் அவருக்கு சிறப்பான ஃபேஷியல் மசாஜ் சேவையை வழங்கியுள்ளனர்.
View this post on Instagram
சலூனில் பின்னணியில் பாடல்கள் ஒலிக்க, மற்ற ஆண் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அவர் மசாஜ் செய்துகொள்ளும் இந்த அசத்தலான அனுபவம் தனது இந்தியப் பயணத்திலேயே மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான மறக்க முடியாத தருணம் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தாஜ்மஹால், இந்தியக் கோயில்கள் மற்றும் டெல்லி வீதிகளைத் தனது பக்கத்தில் பகிர்ந்து வரும் இவரது இந்த லீலைகள் நிறைந்த புதிய வீடியோவிற்கு இணையத்தில் தற்பொழுது கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
பலரும் அவரது துணிச்சலான மற்றும் எதார்த்தமான பயண முறையைப் பாராட்டி வரும் வேளையில், இன்னும் சில நெட்டிசன்கள் அந்நிய தேசத்தில் தனியாகப் பயணிக்கும் போது பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவருக்கு அன்பான எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
