கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பொதுமக்கள் அன்றாடம் போக்குவரத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொண்டு, சாதாரண பயணி போல அரசுப் பேருந்துகளில் திடீர் சோதனை நடத்தினார்.

மேலும் ஒரு பேருந்தில் ஏறிய அமைச்சர், இரண்டு டிக்கெட்டுகள் கேட்டு நடத்துநரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். அப்போது அந்த நடத்துநர் சில்லறை இல்லை என்று கூறி, டிக்கெட் தருவதற்குப் பதிலாக அமைச்சரை பேருந்தில் இருந்து இறங்கிவிடுமாறு அலட்சியமாகத் தெரிவித்துள்ளார்.

“>

இதனால் அமைச்சர் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவர் யார் என்பது நடத்துநருக்கும் ஓட்டுநருக்கும் தெரியவில்லை, இதனால் அமைச்சர் அங்கிருந்து அமைதியாக இறங்கிவிட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் தினசரி சந்திக்கும் டிக்கெட் மற்றும் சில்லறைப் பிரச்சினைகளை நேரடியாக அனுபவித்த அமைச்சர், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், இந்த 2 மணி நேர திடீர் சோதனையின் போது, ஃபன் வேர்ல்டு பேருந்து நிறுத்தத்தில் ஒரு பயணி இறங்க சைகை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். அதன் பிறகு அவர் பயணித்த ஒரு ஆட்டோவிலும், மீட்டர் கட்டணமான 30 ரூபாய்க்குப் பதிலாக ஆட்டோ ஓட்டுநர் 36 ரூபாய் கேட்டு கூடுதல் வசூல் செய்த முறைகேட்டையும் அவர் கண்டறிந்து எச்சரித்தார்.