“சில்லறை இல்லை” என்று கூறி கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சரையே, அவர் அமைச்சர் என்று தெரியாமல் நடத்துனர் பேருந்தை விட்டு இறக்கிவிட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பொதுமக்களின் குறைகளை அறிய பெங்களூருவில் உள்ள அரசு பேருந்து ஒன்றில் திடீரென மாறுவேடத்தில் ஏறி அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

​அப்போது பேருந்தில் டிக்கெட் எடுத்த அமைச்சரிடம், சில்லறை இல்லை என்ற காரணத்தைக் கூறி அவர் அமைச்சர் என்றே தெரியாமல் நடத்துனர் அவரை பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்காகப் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாகச் சென்றுள்ளார். பொதுமக்களின் இந்தத் தினசரி அவதியைத் தானே நேரில் அனுபவித்து உணர்ந்த அமைச்சர் பைரதி சுரேஷ், உடனடியாக அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரையும் பணியிடை நீக்கம் (Suspend) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடி ஆக்ஷன் சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.