இந்தியாவில் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக அதானி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO உருவாக்கியுள்ள அதிநவீன ‘Astra Mark 2’ ஏவுகணையைத் தயாரிப்பதற்காக, விரைவில் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​சமீபத்தில், இந்தியாவின் இந்த அதிநவீன ‘Astra Mark 2’ ஏவுகணையை வாங்குவதற்காக இந்தோனேசிய அரசு இந்தியாவுடன் மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதானி, டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது இந்திய பாதுகாப்புத் துறையிலும், உலக அளவிலும் பெரும் பரபரப்பையும், உற்றுநோக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.