“இங்கிலாந்து டீம்ல ஜோஸ் பட்லர் ஃபார்ம் அவுட்ல இருந்தப்பவும் அவங்க தொடர்ந்து சான்ஸ் கொடுத்து இன்னைக்கு அவன் செஞ்சுரி அடிக்க வச்சிருக்காங்க, ஆனா நம்ம ஆளுங்க இங்கிலாந்து டூர் முழுக்க ஒரே ஒரு மேட்ச்ல கூட ஒரே பிளேயிங் லெவனோட ஆடாம, மியூசிக்கல் சேர் மாதிரி சஞ்சு சாம்சனை தூக்கிட்டு வைபவ்வை போடுறதும் அப்புறம் வைபவ்வை தூக்கிட்டு சஞ்சுவை போடுறதுமா பிளேயர்ஸ் லைஃபோட விளையாடிட்டு இருக்காங்க!”

என்று இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் டீம் மேனேஜ்மென்ட்டின் சொதப்பல் வியூகங்களை ஓப்பனாகவே நாராகக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 4-0 என படுதோல்வி அடைந்ததற்கு, அணியில் வீரர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படாததே முக்கியக் காரணம் என்று அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஹீரோவான சஞ்சு சாம்சனை இப்படி எந்த ஒரு பிளானும் இல்லாமல் ஓப்பனிங் ஸ்லாட்டில் வைத்து பந்தாடுவது அணியின் ஒற்றுமையைக் குலைக்கும் என்று சாடியுள்ள அவர், இங்கிலாந்து அணி தங்களது வீரர்களை மோசமான கால கட்டத்திலும் எப்படித் தாங்கிப் பிடித்தது என்பதை கம்பீர் பார்த்துப் பழக வேண்டும் என்று பாடம் எடுத்துள்ளார்.

“>

பிளேயிங் லெவனில் இஷ்டத்திற்கு ஆட்களை மாற்றி பரிசோதனை முயற்சி என்ற பெயரில் இந்திய அணியின் டாப் ஆர்டரை சிதைத்த கௌதம் கம்பீரின் பிடிவாதப் போக்கை அஸ்வின் இப்படிப் பகிரங்கமாக விமர்சித்திருப்பது பிசிசிஐ (BCCI) வட்டாரத்திலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் ஒரு மாபெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.