ஹரியானா மாநிலம் சோனிபட்டின் செக்டர்-15 ஹவுசிங் போர்டு மார்க்கெட்டில், பைக்கின் பேட்டரியைத் திருடியதாகக் கூறி ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடூர சித்திரவதை வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள மின்சார பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரான சஞ்சீவ் குப்தா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் சேர்ந்து, அந்தச் சிறுவனைத் தரையில் தள்ளி, கைகால்களை முறுக்கி மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், கடையிலிருந்த கேபாசிட்டரைக் (கண்டென்சர்) கொண்டு அந்தச் சிறுவனுக்குக் கொடூரமாக மின்சார கரண்ட் கொடுத்து சித்திரவதை செய்துள்ளனர். “என் அம்மாவைக் கூப்பிடுங்கள்” என அந்தச் சிறுவன் அழுது துடித்த போதிலும் அவர்கள் தங்களது கொடூரத் தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்தச் சம்பவத்தின்போது சிறுவனின் பெற்றோர் அங்கு வந்து குழந்தையைக் காப்பாற்றப் போராடியும், அவர்கள் தொடர்ந்து சிறுவனைத் தாக்கியுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு உள்ளூர் பாஜக பிரமுகர் தலையிட்டதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
चोरी के शक में 8 साल के मासूम पर थर्ड डिग्री टॉर्चर!#हरियाणा के सोनीपत से इंसानियत को झकझोर देने वाला मामला सामने आया है। कथित तौर पर चोरी के शक में एक 8 वर्षीय बच्चे के साथ बेरहमी की गई। वीडियो में बच्चे के हाथ-पैर मरोड़े गए, थप्पड़ मारे गए और कथित रूप से कैपेसिटर से करंट… pic.twitter.com/7KcYh5KZF2
— NCR पत्रिका (@ncrpatrika) July 11, 2026
கடைக்காரர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு, சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகக் கூறியதால் பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இந்தச் சமாதானத்திற்குப் பிறகு இந்த கொடூரத் தாக்குதல் குறித்த மூன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
