மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் உள்ளூர் ரயில்களில், எதிர்பாராத விதமாக நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பெண்களுக்கான பெட்டியில், இருக்கை ஒன்றில் நாய் ஒன்று மிகவும் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதை ஒரு பயணியின் கேமரா படம் பிடித்துள்ளது.

சுற்றியுள்ள பயணிகள் யாரும் அந்த நாயைத் தொந்தரவு செய்யாமல், மாறாக அதன் மீது அன்பு செலுத்திப் பாசத்துடன் தடவிக் கொடுத்த காட்சி பார்ப்பவர்களை உருக வைக்கிறது. அந்த நாய் நீண்ட நேரம் அசையாமல் தூங்கியதால், அது நலமாக இருக்கிறதா என்று பயணிகள் கவலையுடன் பார்த்துக் கொண்டதும், அந்த மனிதநேயம் மிக்க தருணம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பயனர், ஊடகங்கள் சித்தரிக்கும் இந்தியாவுக்கும், தான் அன்றாடம் காணும் இத்தகைய அமைதியான அன்பு நிறைந்த இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @thewoofline

“>

“வாழு, வாழ விடு” என்ற தாரக மந்திரத்திற்குச் சிறந்த உதாரணமாக விளங்கும் மும்பை மக்களின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. இத்தகைய எளிய மனிதநேயச் செயல்கள் செய்திகளில் இடம் பெறுவதில்லை என்றாலும், இவைதான் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணங்கள் என்று நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.