கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது அவர் 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர்களது திருமண வாழ்க்கையில் தங்களுக்குள் குழந்தை வேண்டாம் என்பது தொடர்பாக கணவன் முகமது பீர், தனது 3-வது மனைவி ஹசீனாவிடம் தொடர்ந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குழந்தை பிறந்துவிட்டால் அதன்பிறகு மனைவியை விட்டுத் தன்னால் எளிதில் பிரிய முடியாது என்று விபரீதமாக எண்ணிய முகமது பீர், அவரது பிரசவக் காலம் நெருங்குவதற்கு முன்பாகவே அவரைத் தீர்த்துக்கட்ட விபரீதத் திட்டம் தீட்டியுள்ளார். இந்த விபரீத எண்ணத்தின் காரணமாக, அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 8 மாத நிறைமாத கர்ப்பிணி மனைவி ஹசீனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முகமது பீர் கொடூரமாக முயன்றுள்ளார்.

கணவனின் இந்த வெறிச்செயலால் மூச்சுத் திணறி படுகாயமடைந்த ஹசீனா உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,  காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.