இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் தூய்மைப்படுத்தும் நோக்கில், அதன் 3-ஆம் கட்ட “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த” (SIR) பணியைத் தற்சமயம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, முதற்கட்டமாகப் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கு சுமார் 47 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்டப் பணியில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2.04 கோடி வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது [

இப்பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வர, மறுபுறம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில் உள்ள  கிராமத்தில் பெரும் முறைகேடு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரியான  ஜமிலா பீபி என்பவர், வாக்காளர் சரிபார்ப்பு படிவங்களை வழங்குவதற்கும், அதனைப் பூர்த்தி செய்து வாங்குவதற்கும் பொதுமக்களிடம் தலா 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வெளிப்படையாக லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது

இதுகுறித்து உள்ளூர்வாசியான முகமது பர்வேஸ் அன்சாரி கூறுகையில், லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களை நோக்கி, “பணம் தராவிட்டால் உங்களது இந்தியக் குடியுரிமையைப் பறித்துவிடுவோம்” என்று அந்த பெண் அதிகாரி மிரட்டல் விடுப்பதாகக் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்