“நெட்ஸ்ல வைபவ் சூர்யவன்ஷிக்கு நான் எந்த லைன்ல பந்து வீசுவேன்னு இப்ப சொல்ல மாட்டேன், இந்த ஐபிஎல் (IPL) சீசன் முடியட்டும் அப்புறமா சொல்றேன்!” என்று முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இங்கிலாந்து அணியின் அசுர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மர்மப் புன்னகையுடன் கொடுத்த அந்த டாப் சீக்ரெட் பதில், தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிஜமாகவே அரங்கேறி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வாயடைக்க வைத்துள்ளது.
தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டி20 தொடரில், ஜாம்பவான்களுக்கே சிம்மசொப்பனமாக விளங்கும் மணிக்கு 145 கி.மீ வேகம் கொண்ட ஆர்ச்சரின் அனல் பறக்கும் ஷார்ட் பால் (Short ball) மற்றும் பவுன்சர் வியூகங்களைச் சமாளிக்க முடியாமல், இந்திய அணியின் 15 வயது இளம் கிரிக்கெட் மேதையான வைபவ் சூர்யவன்ஷி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
Reporter: “Where do you bowl to Vaibhav Suryavanshi in the nets?”
Jofra Archer: “I’ll tell you that after the IPL ends.” 😂
Fast forward to the England series…
14 – Dismissed by Jofra Archer on short ball.
15 – Dismissed by Jofra Archer on short ball. pic.twitter.com/RlLQPsZCUx— Vipin Tiwari (@Vipintiwari952) July 9, 2026
“>
ஐபிஎல் நெட்ஸ் பயிற்சியில் சூர்யவன்ஷியின் அசாத்திய பேட்டிங் திறமையைக் கண்டு மிரண்ட ஆர்ச்சர், அவனது பலவீனமான அந்த ‘நோஸ் அண்ட் டோஸ்’ உடலை நோக்கி வரும் பவுன்சர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கி, 14 மற்றும் 15 ரன்களிலேயே அடுத்தடுத்து இரண்டு முறை சூர்யவன்ஷியை ஷார்ட் பாலில் அவுட்டாக்கி தான் சொன்ன சவாலை மைதானத்தில் கச்சிதமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்.
