விளையாட்டுப் போட்டிகளில் தங்களுக்குப் பிடித்தமான அணி வெற்றி பெறும்போது ரசிகர்கள் அதனை வினோதமான முறையில் கொண்டாடுவது உலகளவில் வழக்கமாகிவிட்டது.

ஆனால், அந்த உற்சாகம் சில நேரங்களில் எல்லை மீறும்போது அதுவே ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது. அந்த வகையில், கொலம்பியா நாட்டின் ஆர்மீனியா, குவிண்டியோ நகரில் கால்பந்து உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடிய ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்த மிக மோசமான விபத்து நெஞ்சை நடுங்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Awaazjalandhar5 (@awaaz_jalandhar)

அங்குள்ள சாலை ஒன்றில் காரின் கதவுப் பகுதியில் ஆபத்தான முறையில் அமர்ந்துகொண்டு ஒரு யுவதி பெரும் ஆரவாரம் செய்துள்ளார். கார் நின்றுகொண்டிருந்த சமயத்தில், அதிகப்படியான உற்சாகம் காரணமாக அவர் தனது ஆடைகளைத் திடீரென அவிழ்த்துக் கழற்றியதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த விபரீதத்தைக் கவனிக்காத கார் ஓட்டுநர், வாகனத்தை திடீரென அசுர வேகத்தில் முன்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய அந்தப் பெண், ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் மிகக் கொடூரமாக விழுந்துள்ளார்.

தார்ச் சாலையில் பலத்த வேகத்துடன் விழுந்ததில் அந்தப் பெண்ணின் தலையில் மிகக் கடுமையான ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்துக் கதறியபடி ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், அவசர மருத்துவக் குழுவினர் வரும் வரை அந்தப் பெண்ணை மீட்கப் போராடினர். சில நொடிகளின் த்ரில் ஆசை, வாழ்நாள் முழுக்கப் பேரிழப்பைத் தந்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.