சீனாவை சேர்ந்த ஜாவ் ஜின்கியான் என்ற நபர், கடந்த 2019-ல் ஒரு 3 வயது குழந்தையைக் காப்பாற்றப் போய் 6 மீட்டர் உயர கூரையிலிருந்து கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார்.
அவர் இனி பிழைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் கைகளைக் கழுவிய பிறகு, அவரது 45 வயது மனைவி சங் மேய் நம்பிக்கையை கைவிடாமல் 7 வருடங்களாக தொடர்ந்து கவனித்து வந்தார். கணவனின் மூளை மற்றும் நரம்புகளைச் செயல்பட வைக்க அவர் தினமும் கணவனின் கால் விரல்களைத் தன் பற்களால் கடித்து விசித்திரமான முறையில் சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த அசாத்திய பாசத்திற்குப் பலனாக, 7 வருடங்களுக்குப் பிறகு கண் விழித்த கணவன், தன் மனைவியைப் பார்த்து மிகவும் மெதுவான குரலில் “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான காதல் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
