சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் பிலாய் பகுதியில் உள்ள கோஹ்கா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓயோ ஹோட்டல் ஒன்றில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேம்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஷதாப் ஷேக் என்ற இளைஞரும், அவருடைய 23 வயது காதலியும் இந்த ஹோட்டல் அறையில் தங்கியுள்ளனர்.

மேலும் இவர்கள் தங்கியிருந்த இரவில் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலையில் ஹோட்டல் அறையில் ஷதாப் ஷேக் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஹோட்டல் அறையில் அவருடன் தங்கியிருந்த 23 வயது காதலியைப் போலீஸார் தற்போது தங்களின் காவலில் எடுத்து, அந்த அறையில் இரவில் என்ன நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.