உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் காவல் சௌகியில் புதன்கிழமை இரவு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க-வின் மாவட்டப் பொருளாளரான பூஜா கசௌதன் என்ற பெண்மணி, அங்கிருந்த காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே ஒரு இளைஞரை பளார் என அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரின்படி, அந்த பா.ஜ.க பெண் நிர்வாகி, “அரசாங்கமும் அதிகாரமும் என்னுடையதுதான்; நீ செத்துப்போனால் கூட இதைப் பற்றி கேட்க இங்கே யாரும் வரமாட்டார்கள்” என்று தன்னை மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின் அடிப்படையில் காவல்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

“>

இது குறித்துப் பேசிய நகர காவல் கண்காணிப்பு அதிகாரி ராகவேந்திர சிங், வைரலான வீடியோ மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில் கோத்வாலி நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.