பொதுவாகப் பலரும் மலைகளின் அழகை ரசிப்பதற்காகவும், அங்குள்ள அழகான வீடியோக்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காகவும் டிரெக்கிங் செல்வது வழக்கம்; ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு திருமணமான தம்பதியின் ட்ரெக்கிங் வீடியோ, அதில் உள்ள வித்தியாசமான பின்னணியால் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு தம்பதி செங்குத்தான மற்றும் கரடுமுரடான மலைப் பாதையில் மிகவும் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சூழலில், தனது மனைவியின் பாதுகாப்பிற்காக எந்தவொரு நவீன கயிறு அல்லது பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாதஅந்த கணவன், சற்று யோசிக்காமல் தனது மனைவியின் துப்பட்டாவையே ‘பாதுகாப்பு கவசமாக’ மாற்றியுள்ளார்.
துப்பட்டாவின் ஒரு முனையைத் தனது கையிலும், மறுமுனையைத் தனது மனைவியின் கையிலும் இறுக்கமாகக் கட்டி, திருமணத்தின் போது எடுக்கப்படும் ஏழு சபதங்கள் அந்த ஆபத்தான மலையேற்றத்தில் லைவாக ரீ-கிரியேட் செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் கலகலப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Couple ties hands together with dupatta during hill trek. pic.twitter.com/71OEXi85iP
— Manip0 (@magbhu55) July 6, 2026
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது உண்மையான ஃபெவிகால் பிணைப்பு, விழுந்தாலும் ஒன்னா தான் விழுவோம் போல!” என்றும், “இது ரொமான்ஸை விடமனைவி எங்கே கால் நழுவி விழுந்துவிடுவாரோ என்ற கணவனின் பயத்தைக் காட்டுகிறது, இந்த பயம் ரொம்ப நல்லதுப்பா” என்றும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
