நடுரோட்டில் ஒரு தாயின் கண் முன்னே அவரது மகனுக்கு கார் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தத் தாய் விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மகன் மீது, வேகமாக வந்த சொகுசு ஸ்கார்பியோ கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்ததைக் கண்டு, பெத்த வயிறு பத்தி எரிய அந்த தாய் சம்பவ இடத்திலேயே ஆக்ரோஷமாக கத்தியுள்ளார். விபத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், டிரைவர் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத அந்தத் தாய், காரின் முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை சரமாரியாக அடித்து சுக்குநூறாக உடைத்துத் தள்ளியுள்ளார்.

ஒரு தாயின் இந்த அதிரடி ஆக்ரோஷத்தைக் கண்டு சுற்றியிருந்த பொதுமக்களும், காரில் இருந்தவர்களும் செய்வதறியாது மிரண்டு போயினர். “பெத்த பிள்ளைக்கு ஒரு ஆபத்து என்றால் எந்தத் தாயும் சும்மா இருக்க மாட்டாள்” என்று இந்த வீடியோவை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.