இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது காதலியும், சமூக ஊடக பிரபலமுமான அக்ரிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் இடையேயான நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வந்தன. அக்ரிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், ஆனாலும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

எல்ல வதந்திகளும் உண்மைதான், அவரைப் பற்றி சோஷியல் மீடியாவில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் உண்மை” என்று சூசகமாக ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், பிருத்வி ஷா தான் அக்ரிதியை ஏமாற்றிவிட்டார் என்றும், இவர்களின் காதல் பிரேக்-அப்பில் முடிந்துவிட்டது என்றும் தங்களுக்குத் தோன்றியபடி கமெண்ட்டுகளைப் பரப்பி பிருத்வி ஷாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்ரிதி அகர்வால் தற்போது அதிரடியான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் எனது பதிவில் எனது ஃபியான்சே (பிருத்வி ஷா) பெயரை எங்குமே குறிப்பிடவில்லை, எங்கள் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டதாகவோ அல்லது நாங்கள் பிரிந்துவிட்டதாகவோ நான் கூறவில்லை; மக்கள் ஏன் அவராக இருக்கும் என்று தவறாக யூகித்தார்கள் எனத் தெரியவில்லை” என்று கொதித்துள்ளார்.

மேலும், “நாங்கள் இருவரும் இப்போதும் மகிழ்ச்சியாக ஒன்றாகத்தான் இருக்கிறோம், என் பார்ட்னரின் கண்ணியம் மற்றும் நற்பெயர் கேள்விக்குறியாக்கப்பட்டதால் மட்டுமே நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என்றும், அந்தப் பதிவு தனது க்ளோஸ் பிரண்ட்ஸ்க்காக போடப்பட்டது என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அக்ரிதியின் இந்த விளக்கத்தால் பிருத்வி ஷாவின் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.
View this post on Instagram
