சென்னை: தமிழக அரசியல் களத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில், தற்பொழுது நீதிமன்றத்தில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான ஒரு பிரேக்கிங் திருப்பம் ஏற்பட்டுள்ளது!
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணனைப் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டியதாகவும், குதிரை பேரம் பேச முயன்றதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க, முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
”திடீரென மாறிய நீதிபதி அமர்வு!”
இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தாக்கல் செய்திருந்த இந்த முக்கிய முன்ஜாமீன் மனு, தற்பொழுது வேறொரு நீதிபதி அமர்வுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அதிரடி மூவ் அரசியல் வட்டாரத்தில் பயங்கர விவாதத்தைக் கிளப்பியுள்ளது!
நீதிபதி இளந்திரையன் அமர்வுக்கு மாற்றம் – கோர்ட் அதிரடி!
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியான இளந்திரையன் அவர்களின் அமர்வுக்கு இந்த முன்ஜாமீன் வழக்கு தற்பொழுது முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. அக்குவேறு ஆணிவேறா வழக்குகளை விசாரிப்பதில் கில்லாடியான நீதிபதி இளந்திரையன் கைக்கு இந்த விவகாரம் போயுள்ளதால், செந்தில் பாலாஜி தரப்புக்குக் கூடுதல் பிரஷர் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
